கடந்த 20 ஆண்டுகளில் இமயமலையில் பெரும் பாதிப்பு... 57 கோடி யானை எடையில் பனி இழப்பு எனத் தகவல்
இமயமலை கடந்த 20 ஆண்டுகளில் 57 கோடி யானைகளுக்குச் சமமான எடை கொண்ட பனிப்பாறைகளை இழந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக இமயமலையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், பெரும் பனி இழப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேச்சர் ஜியோ சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, இமயமலையில் உள்ள ஏரிகளின் மேற்பரப்பை செயற்கைக் கோள்கள் மூலம் அளவிட முடியும் என்றும், அதற்கு கீழே பனியாக உள்ளதை கண்காணிக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய கணக்கீட்டின்படி 57 கோடி யானைகள் எடையளவிற்கு இமயமலையில் பனி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பனி இழப்பு கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Comments