முதல் முறையாக விண்வெளிக்கு செல்லும் சவுதியைச் சேர்ந்த பெண் ஒருவர்
சவுதி அரேபியா தனது முதல் பெண் விண்வெளி வீரரை அடுத்த மாதம் விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. ரய்யனா பர்னாவி என்ற அந்தப் பெண் அடுத்த மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குச் செல்ல உள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த NASA மற்றும் Axiom விண்வெளி அதிகாரிகள், சவுதியைச் சேர்ந்த பர்னாவி மற்றும் அலி அல்-கர்னி ஆகியோர் அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல உள்ளதாகக் குறிப்பிட்டனர்.
இவர்களுடன் மேலும் இருவர் இணைந்து செல்ல உள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த 4 பேரும் 10 நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மார்பக புற்றுநோய் ஆராய்ச்சியாளரான பர்னாவி, விண்வெளிக்குச் செல்லும் முதல் சவுதி பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.
Comments