“ஆளுநரின் செயல்பாடுகள் அரசுக்கு முட்டுக்கட்டை போடுவதாக உள்ளது” - அமைச்சர் எ.வ.வேலு

0 3069

ஆளுநரின் பேச்சுகள் மற்றும் நடவடிக்கைகள், அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுவதாகவே உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு விமர்சித்துள்ளார்.

மதுரை நத்தம் சாலையில், 114 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ், மூர்த்தி உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு ஆளுநர், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவிடாமல் முட்டுக்கட்டை போடுகிறார். ஆளுநர் என்பவர் அரசுக்கு உந்து சக்தியாக இருக்க வேண்டும்.

முதலமைச்சர் வேகமாக செயல்படுவதை போல ஆளுநரும் விரைந்து செயல்பட வேண்டும். ஆளுநர் செயல்பாட்டில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக அறிகிறோம். ஆளுநரின் செயல்பாட்டுக்கு மத்திய அரசை நேரடியாக குறை கூற முடியாது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments