தாலிபான் விவகாரம் - முன்னாள் அதிபர் டிரம்ப் மீது அமெரிக்க பாதுகாப்பு கவுன்சில் குற்றச்சாட்டு..!
ஆப்கானிஸ்தான் மீண்டும் தாலிபான்கள் வசம் சென்றதற்கு, முன்னாள் அதிபர் டிரம்பும், உளவுத்துறை குளறுபடிகளும் முக்கிய காரணங்கள் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் அதிபர் டிரம்ப், அமெரிக்க படைகள் வெளியேறும் தேதியை முன்கூட்டியே அறிவித்து எவ்வித திட்டமிடலும் இன்றி அமெரிக்க ராணுவத்தை வெளியேற்றியதாலும், தாலிபான்களின் பலத்தை உளவுத்துறை சரியாக கணிக்கத் தவறியதாலும், ஆப்கானை தாலிபான்கள் எளிதாக கைப்பற்ற உதவியதாக ஜோ பைடன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், பல மில்லியன் டாலர் செலவில் பயிற்சி அளிக்கப்பட்ட ஆப்கான் ராணுவம் சண்டையிடாமல் பின்வாங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Comments