6 வழிச்சாலை பணி நடைபெறும் இடத்தில் சடலத்தை எரித்து மக்கள் போராட்டம்

0 1574

திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில், பல தலைமுறையாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டை கையகப்படுத்தி நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மாற்று இடம் வழங்க கோரி உயிரிழந்தவரின் உடலை கையகப்படுத்திய நிலத்தில் வைத்து எரித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பதி - நெமிலிச்சேரி இடையே சுமார் 364 கோடி ரூபாய் செலவில் 6 வழிச்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, காக்களூர் கிராமத்தில் இருந்த சுடுகாடு அகற்றப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அக்கிராம மக்கள், இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்ய சுடுகாடு இல்லை எனக்கூறி, உயிரிழந்த ஒரு நபரின் சடலத்தை, நெடுஞ்சாலை பணிகள் நடைபெறும் இடத்தில் வைத்து எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த திருவள்ளூர் வட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளர், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுடுகாட்டிற்கு மாற்று இடம் வழங்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments