சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட அரசு தரப்பு வழக்கறிஞரை நியமித்த கர்நாடக அரசு
சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் உடமைகள், பரிசு பொருட்களை ஏலத்திற்கு விட நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அரசு தரப்பு வழக்கறிஞரை கர்நாடக அரசு நியமித்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், பறிமுதல் செய்யப்பட்டு பல ஆண்டுகளாக கருவூலத்தில் உள்ள பல கோடி மதிப்புடைய தங்க, வைர நகைகள், பரிசுப் பொருட்களை ஏலம் விட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கின் நீதிமன்ற உத்தரவுபடி ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட அரசு தரப்பு வழக்கறிஞராக கிரண் எஸ். ஜவாலி என்பவரை நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
Comments