யூட்டா மாகாணத்தில் உள்ள பனிச்சறுக்கு ரிசார்ட்டில் திடீர் பனிச்சரிவு..!
அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தின் ஸ்னோபேர்ட் கிராமத்தில் உள்ள, பனிச்சறுக்கு ரிசார்ட்டில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
பனிச்சரிவில் மக்கள் யாரும் சிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பனிச்சரிவின் காரணமாக பனிச்சறுக்கு ரிசார்ட்டுகள் மூடப்பட்டு, மக்கள் அங்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பனிச்சரிவு எச்சரிக்கை காரணமாக, ஸ்னோபேர்ட் கிராமத்தில் உள்ள சுற்றுலா பயணிகள் தங்குமிடங்களை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்குமிடங்களிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Comments