விலை சரிந்ததால் விவசாயிகள் வேதனை.. கால்நடைகளுக்கு தீவனமாகும் புதினா செடிகள்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் வரத்து அதிகரிப்பால், புதினா விலை கடும் சரிவடைந்த நிலையில், புதினா பயிரிடப்பட்ட விளைநிலத்தில் விவசாயிகள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.
100 புதினா கட்டுகள் கொண்ட ஒரு மூட்டை 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது வரத்து அதிகரிப்பால் ஒரு மூட்டை 100 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் பெரிதும் லாபம் கிடைக்கவில்லை எனக்கூறும் விவசாயிகள், அறுவடைக்கு தயாராக இருந்த புதினாக்களை விளைநிலத்திலேயே விட்டு வைத்துள்ளனர்
Comments