பிரதமர் மோடி நாளை பிற்பகல் சென்னை வருகிறார்.. பாதுகாப்பு பணியில் 26,000 போலீசார் குவிப்பு..!

0 1501

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 1260 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தையும், சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருவதால் 26 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

நாளை பிற்பகல் சுமார் 2.45 மணியளவில் மீனம்பாக்கம் விமான நிலையம் வரும் பிரதமர், அங்கு புதிய முனையத்தை திறந்து வைக்கிறார்.  மாலை 4 மணி அளவில் சென்னை சென்டிரல் எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், வந்தே பாரத் ரயில் சேவை, தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரயில் சேவை, 294 கோடியில் திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம் பள்ளி இடையே அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையில் ரயில் சேவையை தொடங்கி வைக்கவுள்ளார். 

பின்னர் விவேகானந்தர் இல்லம் செல்லும் பிரதமர், ராமகிருஷ்ணா மடத்தின் 125ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். இதையடுத்து பல்லாவரம் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று, 3,700 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைத் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். விழா முடிந்ததும், மைசூர் செல்லும் பிரதமர், மறுநாள் காலை தெப்பக்காடு முதுமலை யானைகள் காப்பகத்துக்கு சென்று, ஆஸ்கர் விருது வென்ற எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்பட தம்பதியை சந்திக்கவுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments