பக்முட் நகரைக் கைப்பற்ற உக்ரைன், ரஷ்யா இடையே கடும் போர்..!

0 1899

உக்ரைனின் பக்முட் நகரைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ரஷ்ய வீரர்களின் பதுங்கு குழிகளை உக்ரைனிய டாங்குகள் தகர்க்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கி 14 வது மாதமாக நடந்து வரும் நிலையில், பக்முட் நகரைக் கைப்பற்ற ரஷ்ய படையினரும், தக்க வைத்துக் கொள்ள உக்ரைன் வீரர்களும் கடும் போரிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அந்நகரின் இவானிவ்ஸ்கே நகருக்கு மேற்குப் பகுதியில் ரஷ்ய வீரர்கள் பதுங்கு குழிகளை அமைத்து போரிட்டு வருகின்றனர். இதனையறிந்த உக்ரைன் டேங்குகள் அப்பகுதிக்குச் சென்று அவர்கள் மீது சரமாரியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

இதனைத் தொடர்ந்து டேங்குகளின் தாக்குதலில் தப்பித்து பதுங்கிச் சென்ற ரஷ்ய வீரர்களை, பின்புறம் மறைந்து சென்ற உக்ரைன் வீரர்கள் தாக்கி அழிக்கும் ட்ரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments