"ஆன்லைன் பந்தயத்தை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்களை தவிர்க்க வேண்டும்" - மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம்

0 1396

பந்தயத்துடன் கூடிய ஆன்லைன் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்களை, ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் விளம்பர நிறுவனங்கள் தவிர்க்க வேண்டுமென்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பந்தயம் தொடர்பான இணையதளங்களில் அதனை ஊக்குவிக்கும் விதமான விளம்பரங்களை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி நாளிதழ்கள் சமீப காலமாக வெளியிட்டு வருவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

பந்தயம் தொடர்பான விளம்பரங்கள் மூலம் மக்கள் ஈர்க்கப்படுவது பதிப்புரிமைச் சட்டத்திற்கு 1957 புறம்பாக உள்ளதாக பிரஸ் கவுன்சிலின் பத்திரிகை நெறிமுறைகளை சுட்டிக்காட்டிய இந்த ஆலோசனைகள், நாளிதழ்கள் சட்டத்திற்கு புறம்பான விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments