உயிருக்கு அஞ்சி ரகசிய வாழ்க்கை வாழ்கிறாரா அதிபர் புதின்?

0 2569

ரஷ்ய அதிபர் புதின் தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதுவதால் பல்வேறு ரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரகசியமான ரயில் நெட்வொர்க், பல்வேறு நகரங்களில் ரகசிய அலுவலகங்கள், தாமாகவே தனிமைப்படுத்திக் கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளை புதின் மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

புதினின் ரகசிய வாழ்க்கை குறித்து அந்நாட்டு பாதுகாப்பு உயர் அதிகாரி Gleb Karakulov  அமெரிக்க நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். தாம் செல்லும் பாதை தெரியாத வகையில் புதின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் தம்மை மறைத்து வாழ்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் தமது வீடுகளிலேயே புதின் அடைந்து கிடப்பதாகவும் பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments