கொரோனாவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று ஆலோசனை..!
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்துகிறார்.
டெல்லியில் காணொளி வாயிலாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட குழு மற்றும் நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.
Comments