''ஜூன் மாதத்திற்குள் பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால் கூடுதல் அபராதம் விதிக்கப்படும்..'' - நிர்மலா சீதாராமன்..!
ஜூன் மாதத்திற்குள் பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால் கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
ஆதார் - பான் கார்டு இணைப்பில் ஏற்பட்ட தாமதங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்த நிதியமைச்சர், ஏற்கனவே அதிக கால அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது என்றும் இனியும் தாமதம் தொடர்ந்தால், அபராதத் தொகை கூடிக்கொண்டே போகும் என எச்சரித்தார்.
வருமான வரிச் சட்டம் 1961 இன் படி, ஜூலை 1, 2017 வரை பான் கார்டுகள் வழங்கப்பட்டவர்கள் மற்றும் ஆதார் அட்டைக்கு தகுதியுடையவர்கள் வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் ஆதார் - பான் இணைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் தவறினால் ஜூலை ஒன்றாம் தேதி முதல் பான் அட்டைகள் செயலிழந்துவிடும் என்றும் ஏற்கனவே நிதியமைச்சகம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments