பாலி கடற்கரையில் இறந்து கரையொதுங்கிய 18 மீட்டர் நீளமுள்ள ஸ்பெர்ம் திமிங்கலம்..!
இந்தோனேசியாவின் பாலி கடற்கரையில் சுமார் 18 மீட்டர் நீளமுள்ள ஸ்பெர்ம் திமிங்கலம் இறந்து கரையொதுங்கியது. புதன்கிழமை அன்று நீந்தி கடற்கரைக்கு வந்த இந்த ராட்சத திமிங்கலத்தை, உள்ளூர் மக்களும் அதிகாரிகளும் மீண்டும் கடலுக்குள் தள்ளியுள்ளனர்.
அடுத்த சில மணி நேரங்களிலேயே மற்றொரு கடற்பகுதியில் அந்த திமிங்கலம் உயிரிழந்து கரை ஒதுங்கியுள்ளது.
அதன் உடலில் காயங்கள் ஏதும் இல்லாத நிலையில், கடல் நீர் மாசுபாட்டால் அது உயிரிழந்ததா? அல்லது பிளாஸ்டிக்கை உண்டதால் உயிரிழந்ததா? என திமிங்கலத்தின் இறப்பிற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Comments