உக்ரைனின் MiG-29 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டோம் - ரஷ்யா

0 1602

உக்ரைனின் MiG-29 போர் விமானத்தை தங்கள் ராணுவம் சுட்டுவீழ்த்தி விட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான தாக்குதலில் ஏற்பட்டுள்ள முன்னேற்ற நிலை குறித்து, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள ஹிமார்ஸ் ரக 13 ராக்கெட்டு அமைப்புகள்,ஹார்ம் எனப்படும் அதிவேக கதீர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை ஆகியவற்றை சுட்டு வீழ்த்தி விட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, உக்ரைன் ஆயுதப்படை தரப்பில், லிமன், பாக்முட்டில் தாக்குதல் நடத்தி வரும் ரஸ்ய ராணுவத்தினருக்கு தகுந்த பதிலடி கொடுத்து வருவதாகவும், ரஸ்ய நிலைகள் மீது விமானப்படையை கொண்டும், ஏவுகணைகளை வீசியும் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments