தென்காசியிலிருந்து கேரளாவிற்கு கனிமவளம் கடத்தப்படுவதாக புகார்.. சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட தனிப்படையினர்

0 1322

தென்காசியிலிருந்து கேரளாவிற்கு சட்ட விரோதமாக கனிமவளம் கடத்தப்படுவதாக எழுந்த புகாரையொட்டி அமைக்கப்பட்ட சிறப்புத் தனிப்படையினர் புளியரை சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கனிமவளத்துறை உதவி இயக்குநர் சத்தியசீலன் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவினர், கனிம வளங்களை எடுத்துச் செல்லும் லாரிகளை மறித்து ஆவணங்களை சரிபார்த்து, அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம் விதித்தனர்.

இந்த கண்காணிப்பு தொடர்ந்து நடைபெறும் எனவும், சட்ட விரோதமாக கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சிறப்பு தனிப்படை அதிகாரி சத்தியசீலன் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments