அரசுமுறைப் பயணமாக சீனா சென்றார் பிரான்ஸ் அதிபர் மேக்ரன்
அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன், தலைநகர் பெய்ஜிங்கில் பிரதமர் லீ கியாங்கை இன்று சந்தித்து பேசினார்.
50 பேர் கொண்ட வணிகக் குழுவினருடன் சீனா சென்றுள்ள இம்மானுவேல் மேக்ரன், இன்று அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அவருடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனும் சீன அதிபரை சந்திக்கிறார்.
உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த ரஷ்யா மீது சீனா தனது செல்வாக்கை பயன்படுத்த வேண்டும் அல்லது ரஷ்யாவை நேரடியாக ஆதரிப்பதில் இருந்து சீனாவை தடுக்க வேண்டும் என மேக்ரனும், ஐரோப்பிய ஒன்றிய தலைவரும் தெரிவித்துள்ளனர்.
Comments