இந்தியாவை பாகிஸ்தானுடன் இணைக்கும் கமான் அமன் சேது பாலம் திறப்பு..!
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாக, ஜம்மு - காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலுள்ள கமான் அமன் சேது அமைதிப் பாலம் திறக்கப்பட்டுள்ளது.
பாரமுல்லா மாவட்டத்தில் உரி செக்டரில் காலின்-டா-காஸ் நல்லாவின் நதி மீது கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் இந்தியப் பக்கத்தில் இந்தியக் கொடியையும், எதிர்புறத்தில் பாகிஸ்தான் கொடியையும் தாங்கி நிற்கிறது.
ஜம்மு - காஷ்மீர் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்காகவும், எல்லையோர கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் வணிக வாய்ப்புகளை வழங்கவும், ராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் வரலாறு குறித்து நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக இந்திய ராணுவம் அமைதிப் பாலத்தினை திறந்துள்ளது.
Comments