அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளுக்கு, சீனா பெயர் சூட்டியதை இந்தியா நிராகரித்த நிலையில், அப்பகுதிகளின் மீது உரிமை கோரும் சீனா..!
அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளுக்கு, சீனா பெயர் சூட்டியதை இந்தியா நிராகரித்த நிலையில், அப்பகுதிகளின் மீது உரிமைகோரி சீனா பதிலளித்துள்ளது.
பெய்ஜிங்கில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி எனவும், சீனாவின் இறையாண்மை உரிமைகளுக்கு உட்பட்டு Zangnan சில பகுதிகளின் பெயர்கள், நிர்வாக ரீதியிலாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே, சீனாவின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, இந்தியாவில் உள்ள அருணாச்சல பிரதேசத்தை சீனா தன்னிச்சையாக உரிமை கோருவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளது.
Comments