திருமண பரிசாக வந்த ஹோம் தியேட்டருக்குள் வெடிகுண்டு வெடித்து புதுமாப்பிள்ளை உட்பட 2 பேர் பலி.. முன்னாள் காதலன் கைது!

0 4329

சத்தீஷ்கரில் திருமண பரிசாக வந்த ஹோம் தியேட்டர் வெடித்து புதுமாப்பிள்ளை உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவத்தில், மணப்பெண்ணின் முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கபீர்தாம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமேந்திராவுக்கு கடந்த ஏப்ரல் 1ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பரிசாக வந்த ஹோம் தியேட்டர் சிஸ்டத்திற்கு மின் இணைப்பு கொடுத்தபோது திடீரென வெடித்து சிதறியது.

இதில், அறையின் மேற்கூரை இடிந்து விழுந்து ஹேமேந்திரா மற் றும் அவரது சகோதரர் பலியாகினர். தடயவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி, ஹோம் தியேட்டர் அமைப்புக்குள் வெடிகுண்டு வைத்து சதி வேலையில் ஈடுபட்ட மணப்பெண்ணின் முன்னாள் காதலான சர்ஜுவை கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments