மிளகாய் அபிஷேகம் செய்தும்.. கொதிக்கும் எண்ணெய் சட்டியில் உள்ள வடையை கையால் எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக் கடன்..
விழுப்புரம் அருகே முருகன் கோவிலில் நடைபெற்ற பங்குனி உத்திர விழாவில், பக்தர்கள் மிளகாய் அபிஷேகம் செய்தும், எண்ணெய் சட்டியில் வெறும் கையால் வடை எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
பிள்ளையார்குப்பத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், தங்கள் மீது மிளகாய் அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் உள்ள வடையை கையால் எடுத்தனர். இதனை சாப்பிட்டால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
Comments