பங்காபஜாரில் தீ விபத்து: ரமலான் பண்டிகைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த ஆடைகள், 3,000 கடைகள் எரிந்து சேதம்

0 2158
பங்காபஜாரில் தீ விபத்து: ரமலான் பண்டிகைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த ஆடைகள், 3,000 கடைகள் எரிந்து சேதம்

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பிரபலமான ஆடை சந்தையான பங்காபஜாரில் அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 3 ஆயிரம் கடைகள் தீயில் எரிந்து நாசமாகின.

600 தீயணைப்பு வீரர்கள் மற்றும் ராணுவத்தினர் கொளுந்து விட்டெறிந்த தீயை அணைக்கும் பணியில் 6 மணி நேரமாக ஈடுபட்டு தீயை கட்டுப்படுத்தினர்.

சிறிய அளவில் தடுப்புகளுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள இந்த கடைகளில் குறைந்த விலையில் ஆடைகள் கிடைக்கும் என்பதால் எப்போதும் அதிக நெருக்கடியோடு காணப்படும்.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு கடையிலும் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டிருந்ததால் வியாபாரிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments