நிலக்கரி ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதியை விலக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

0 1436

நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளை விலக்கிட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஆணையம், நாடு முழுவதும் ஏலம்விட்ட 101 வட்டாரங்களில், தமிழக டெல்டா பகுதியில் உள்ள சேத்தியாத்தோப்பு கிழக்கு, மைக்கேல்பட்டி, வடசேரியும் உள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் வடசேரி, சேத்தியாத்தோப்பு கிழக்கு ஆகியவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருவதால், அங்கு எந்தவொரு புதிய திட்டத்தையும் மேற்கொள்ளக்கூடாதென்ற விதியை கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments