வலியச்சென்று வம்பிழுத்த காங்கிரசாரை ஓட விட்ட பா.ஜ.கவினர் கல்வீச்சு..! பதிலுக்கு பதில் பறந்த கற்கள்

0 2774
வலியச்சென்று வம்பிழுத்த காங்கிரசாரை ஓட விட்ட பா.ஜ.கவினர் கல்வீச்சு..! பதிலுக்கு பதில் பறந்த கற்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரசாருக்கும், பாஜ.கவினருக்கும் இடையே நடந்த  கடுமையான கல்வீச்சு சம்பவம் தொடர்பாக 15 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், காரில் தப்பிச்சென்ற பாஜக மாவட்ட தலைவரை போலீசார் மடக்கிப்பிடித்த காட்சி வெளியாகி உள்ளது

ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து நாகர்கோவிலில் திங்கட்கிழமை மாலை திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் நாகர்கோயிலில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு பிரதமர் மோடிக்கு எதிராக கோஷமிட்டதுடன், சாலையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர்.

வலிய சென்று வம்பிழுத்த காங்கிரஸ் கட்சியினருக்கும், பா.ஜ.கவினருக்கும் இடையே கடுமையான கல்வீச்சு போர் நடந்தது. இரு தரப்பிலும் பலருக்கு காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மோதல் தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் 31 பேர் மீதும் பாஜக தரப்பில் 22 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த கோட்டாறு போலீசார், 15க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

சிங்கான் கடை அருகே போட்டியோடு பகுதி வழியாக காரில் சென்ற பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜை, விரட்டிச்சென்ற சென்ற துணை காவல் கண்காணிப்பாளர் நவீன் தலைமையிலான போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments