டிரைவ் -இன் தியேட்டர், ஆடம்பர கிளப் ஹவுஸ்கள், ஹெலிபேடு வசதி - கோவையில் ஜி ஸ்கொயர் புதிய திட்டம்

0 11058

கோயம்புத்தூரில் டிரைவ் - இன் தியேட்டர், ஹெலிபேடு வசதி ஆடம்பர கிளப் ஹவுஸ்கள், என ஜி ஸ்கொயர் சிட்டி 2.0 எனும் புதிய திட்டத்தை, மனைவிற்பனை மேம்பாட்டு நிறுவனமான ஜி ஸ்கொயர் தொடங்கியுள்ளது.

110 ஏக்கர் பரப்பளவில் 1,688 வீட்டு மனைப் பிரிவுகள் மற்றும் 8 வணிக மனைகள் உடன் சர்வதேச தரத்திலான 90 நவீன வசதிகள் ஜி ஸ்கொயர் சிட்டி 2.0 திட்டத்தில் அமைய உள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 127 ஏக்கர் பரப்பளவில் அமைந்த ஜி ஸ்கொயர் திட்டத்தைத் தொடர்ந்து இந்த புதிய திட்டம் துவக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜி ஸ்கொயர் சிட்டி 2.0-வில் 3 சென்ட் மனையின் விலை 27 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments