சென்னை ரேஸ் கிளப் செலுத்த வேண்டிய சொத்துவரி பாக்கியில் ரூ.35 லட்சத்தை நான்கு வாரத்தில் செலுத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்!
கிண்டியில் செயல்பட்டு வரும் சென்னை ரேஸ் கிளப் செலுத்த வேண்டிய சொத்துவரி பாக்கியில், 35 லட்சம் ரூபாயை, நான்கு வாரங்களில் செலுத்த வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1998 ஆம் ஆண்டு முதல் 2018 வரையில் சொத்துவரியாக 3 கோடியே 60 லட்சத்து 41 ஆயிரத்து 163 ரூபாய் செலுத்தக்கோரும் சென்னை மாநகராட்சியின் நோட்டீசிற்கு தடை விதிக்கக்கோரி, ரேஸ் கிளப் தாக்கல் செய்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நோட்டீசுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, 4 வாரத்தில் 35 லட்சம் ரூபாயை செலுத்த நீதிபதி உத்தரவிட்டார். மேலும் 6 வாரத்தில் புதிதாக சொத்து வரி வசூல் தொடர்பாக கணக்கிட்டு, போதிய வாய்ப்பு அளித்து புதிய நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று, சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட்டார்.
ஏற்கனவே, வாடகை பாக்கி தொடர்பான வழக்கில் 730 கோடி ரூபாயை ஒரு மாதத்திற்குள் செலுத்த ஏப்ரல் 1ஆம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments