சீன உளவு பலூன் அமெரிக்க ராணுவத் தளங்களை வேவு பார்த்தது உண்மை... அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கையில் தகவல்

0 1621

அமெரிக்காவால் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூன் அமெரிக்காவின் பல ராணுவத் தளங்கள் குறித்த தகவல்களை சேகரித்ததாக அந்நாட்டு உளவுத்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது. ஆனால் அது வானிலை குறித்த தகவல்களைச் சேகரிக்க அனுப்பப்பட்டதாகவும், தவறுதலாக அமெரிக்க எல்லைக்குள் நுழைந்து விட்டதாகவும் சீனா கூறியிருந்தது.

இந்நிலையில் அமெரிக்க உளவுதுறையின் அறிக்கையில், ராட்சத பலூன் வீழ்த்தப்படுவதற்கு முன் அமெரிக்க ராணுவத் தளங்களின் மேல் எண் எட்டு வடிவில் பறந்து தகவல்களைச் சேகரித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments