எல்.ஐ.சியில் தீயணைப்பு பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக இல்லை-தீயணைப்புத்துறையினர்
தீ விபத்து நிகழ்ந்த சென்னை எல்ஐசி கட்டிடத்தில் தீயணைப்பு பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக இல்லையென மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
அண்ணாசாலையில் 14 மாடி கொண்ட எல்ஐசி கட்டடத்தின் உச்சிப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பெயர் பலகை மின்கசிவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை தீப்பிடித்து எரிந்தது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணன், எல்ஐசி அலுவலகத்தில் உள்ள தீயணைப்பு கருவிகளின் இயக்கதன்மையை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரவணன், கட்டடம் 1956ம் ஆண்டு கட்டப்பட்டது என்பதால் தரைதளம் உட்பட சில இடங்களில் தீயணைப்பு பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளோம்.
குறைகளை உடனடியாக அதனை சரி செய்வதாக எல்ஐசி அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சரவணன் கூறினார்.
Comments