தஞ்சாவூரில் மாநகராட்சி சேவைகளை வீட்டிலிருந்தே பெற, புகார் தெரிவிக்க க்யு.ஆர். கோடு வசதி..!
தஞ்சாவூரில் பொதுமக்கள் வீட்டில் இருந்தே குடிநீர் பிரச்சனை, குப்பைகள் அள்ளாமல் இருப்பது உள்ளிட்ட எவ்வகை பிரச்சனைகளையும் கியூ.ஆர். கோடு மூலம் ஸ்கேன் செய்து தெரிவிக்கும் வகையில், வீடுகள் தோறும் கியூ.ஆர். கோட் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
புதிய வசதியினை தொடங்கி வைத்து பேட்டியளித்த மேயர் சண். ராமநாதன், மாநகராட்சியில் 51 வார்டுகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஒரு மாதத்தில் கியூ ஆர் கோடு ஸ்டிக்கர் ஓட்டி முடிக்கப்படும் என்றும் வீட்டில் வசிப்பவர்களின் பெயர், முகவரி, தொடர்பு எண், கட்டிடம் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், வீட்டில் இருந்தபடியே மொபைல் கேமராவில் கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்து சொத்து வரி, குடிநீர் வரி, கடை வாடகை உள்ளிட்டவற்றை செலுத்தலாம் என்றும் குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட புகார்கள் பதிவு செய்த அடுத்த சில மணி நேரங்களிலேயே பிரச்சனை தீர்க்கப்படும் என்றும் மேயர் குறிப்பிட்டார்.
Comments