தேனீக்கள் வளர்ப்பில் பள்ளி மாணவிகள்.! தேனீ போன்ற சுறுசுறுப்புடன் தந்தைக்கு உதவி..!
ஈரோடு மாவட்டம் கோபி அருகே, தேனீக்கள் வளர்ப்பில் ஈடுபடும் பள்ளி மாணவிகளான சகோதரிகள், படித்த நேரம் போக, தந்தையுடன் இணைந்து, தேன் விற்பனையிலும் ஈடுபட்டு வருமானம் ஈட்டி வருகின்றனர்.
கோபியை அடுத்துள்ள வளையபாளையம் சஞ்சீவிராயன்குளம் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள கொளத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல்... 10 ஏக்கர் நிலம் வைத்து, வாழை, கரும்பு, பாக்கு மரம் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்வதோடு, கடந்த 7 ஆண்டுகளாக தேனீ வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவரது 6ஆம் வகுப்பு படிக்கும் மகள் தர்ஷனாவும், 4ஆம் வகுப்பு படிக்கும் பார்கவியும், தந்தைக்கு தேனீ வளர்ப்பில் உதவிகரமாக இருந்த நிலையில், தற்போது, அவர்களும் தேனீ வளர்ப்பில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி என்னென்ன வகையான தேனீக்கள் உள்ளது அதை எவ்வாறு பராமரிப்பது அதை எப்படி கையாள்வது என்பது குறித்து முழு ஈடுபாட்டுடன் கற்று அந்தப் பணிகளை இரு மகள்களும் செய்து வருகின்றனர். விடுமுறை நாட்களில் படித்த நேரம் போக தந்தையுடன் இணைந்து தேன் எடுத்து அதை பாட்டில்கள் மூலம் மருந்து கடைகளுக்கும், குழந்தைகளுக்கும் ஒரு லிட்டர் 600 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர்
மேலும், வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் தேனீக்களை வளர்ப்பதால் யானைகள் பெரும்பாலும் அங்கு வருவதில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர்....
Comments