அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நீட்டிப்பு

0 3588

அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு இம்மாதம் 13-ம் தேதி வரை ஜாமீனை நீட்டித்து சூரத் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரண்டாண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய டெல்லியில் இருந்து புறப்பட்டு இன்று பிற்பகலில் குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றத்திற்கு ராகுல்காந்தி வந்தார். அவருடன் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் இம்மாசலப் பிரதேச முதலமைச்சர்களும் வந்திருந்தனர்.

இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு சூரத் மாவட்ட நீதிமன்றம் வரும் 13-ம் தேதி வரை ஜாமீன் நீட்டித்து உத்தரவிட்டது. தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி தொடர்ந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மே மாதம் 3-ம் தேதி நடைபெற இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments