உற்பத்தியை குறைக்க ஒபெக் முடிவு.. கச்சா எண்ணெய் விலை 6 சதவிகிதம் உயர்வு..!
கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கப்போவதாக, எண்ணெய் உற்பத்தி நாடுகளான ஒபெக் அறிவித்ததையடுத்து, ஆசிய சந்தையில் இன்று கச்சா எண்ணெய் விலை 6 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஒபெக் நாடுகள் அமைச்சர்களின் கூட்டத்திற்கு பின், வரும் மே மாதம் முதல் இந்த ஆண்டு இறுதி வரை, தினமும் 5 லட்சம் பீப்பாய்கள் மட்டுமே எண்ணெய் உற்பத்தி செய்ய உள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. இதேபோல், ஒபெக் கூட்டமைப்பில் உள்ள பிற நாடுகளும் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்துள்ளன.
கச்சா எண்ணெய் விலையில், நிலைத்தன்மையை ஏற்படுத்தவே இந்த உற்பத்திக்குறைப்பு என அந்நாடுகள் விளக்கமளித்த நிலையில், இது அறிவார்ந்த செயல் இல்லை என, அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு, குறைவான விலையில் கச்சா எண்ணெய் கிடைப்பது அவசியம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
உற்பத்தி குறைப்பு நடவடிக்கையால், சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம் அதிகரிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments