கந்தசாமி நாயுடு அறக்கட்டளை நில மோசடி வழக்கில் பெண் வழக்கறிஞர் கைது!

0 6345

சென்னையில் உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள கந்தசாமி நாயுடு அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த விவகாரத்தில் பெண் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.

நாடு சுதந்திரமடைந்த பின் 1947 ஆம் ஆண்டு சென்னை அபிராமிபுரம் திரையரங்கு இருந்த இடத்திற்கு பின்புறத்தில் இருந்து ஓட்டேரி வரை உள்ள 400 கிரவுண்டு இடத்தை கந்தசாமி நாயுடு, ஏழை மாணவர்களின் படிப்புக்காக வாங்கியுள்ளார்.

டிரஸ்ட் ஆஃப் மெட்ராஸ் என்ற பெயரில் கந்தசாமி நாயுடு ,தன் குடும்பத்தினருக்கு பிறகு அரசாங்கம் எடுத்து நடத்தும் படி உயில் எழுதி வைத்துள்ளார்.

அதன்படி நிலமானது மாவட்ட நீதிபதி தலைமையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரெஜினா ஸ்ரீ என்ற வழக்கறிஞர் வரதம்மாள் தோட்டம் பகுதியில் உள்ள 20 கிரவுண்ட் இடம் தனது பெயரில் உள்ளதாகவும், அந்த நிலம் தனது பூர்வீக சொத்து என்றும் கூறி போலி ஆவணம் தயாரித்து 2017ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சாதகமாக உத்தரவை பெற்றுள்ளார்.

அந்த உத்தரவை வைத்து வருவாய்த்துறையில் தனது பெயருக்கு ஆவணங்களை மாற்றி பதிவு செய்ய முயற்சித்த போது, உயர்நீதிமன்ற அட்மினிஸ்ட்ரேட்டர் ஜெனரல் அளித்த புகாரின் பேரில் போலீசார் ரெஜினா ஸ்ரீயை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments