தொழிலதிபர் ஆனந்த் மகேந்திராவை ஈர்த்த மகாராஷ்டிராவின் மொஹித்யாஞ்சே வட்கான் கிராமம்.!
மின்னணு சாதனங்களின் பயன்பாட்டை தினமும் ஒன்றரை மணி நேரம் கட்டுப்படுத்தி, அதனை தவறாமல் கடைபிடிக்கும் மகாராஷ்டிராவில் உள்ள கிராமத்தைப் பற்றி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
டிஜிட்டல் சாதனங்களின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில், இடையே அவ்வப்போது அவற்றையெல்லாம் தற்காலிகமாக விலக்கி வைப்பதை ''டிஜிட்டல் டீடாக்ஸ்'' என்று குறிப்பிடுகின்றனர்.
மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்திலுள்ள மொஹித்யாஞ்சே வட்கான் கிராமத்தினர் ''டிஜிட்டல் டீடாக்ஸ்'' கடைபிடிக்கின்றனர். இதற்கென தினமும் ஒன்றரை மணி நேரம் ஒதுக்குவதாகவும், கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து தவறாமல் கடைப்பிடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தினமும் மாலை 7 மணிக்கு சைரன் ஒலிக்கிறது. தொடர்ந்து கிராமமக்கள் தங்கள் மொபைல் போன்கள் மற்றும் பிற கேஜெட்களை பயன்படுத்துவதை நிறுத்திவிடுகின்றனர். இதனை கவனிக்க கிராமத்தில் ரோந்துக் குழு ஒன்றும் உள்ளது.
Comments