'ஆஸ்திரேலிய கிராண்ட் பிரி' கார் பந்தயம்.. மேக்ஸ் வெர்ஸ்டப்பன் முதலிடம்..!
ஏராளமான விபத்துகளுக்கு மத்தியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய கிராண்ட் பிரி கார் பந்தயத்தில், மேக்ஸ் வெர்ஸ்டப்பன் முதலிடம் பிடித்தார்.
மெல்போர்னில் நடைபெற்ற பார்முலா ஒன் கார் பந்தயத்தில், நடப்பு சாம்பியனான வெர்ஸ்டப்பன் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்த தொடங்கினார்.
போட்டி நிறைவடைய சில சுற்றுகளே இருந்த நிலையில், கார்கள் ஒன்றோடொன்று மோதியும், தடுப்பு சுவரில் மோதியும் அடுத்தடுத்து விபத்துகள் நேர்ந்ததால் போட்டி 3 முறை நிறுத்தப்பட்டது.
8 கார்கள் விபத்துக்குள்ளாகி வெளியேறிய நிலையில், எஞ்சியிருந்த 12 போட்டியாளர்களில் வெர்ஸ்டப்பன் முதலாவதாக வந்து வாகை சூடினார்.
Comments