ஏப்ரல் 14ஆம் தேதி, பிற்பகலில் ஊழல் பட்டியல், ரபேல் வாட்ச் பில் ஆகியவை வெளியிடப்படும் - அண்ணாமலை

0 3467

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

நாரதகான சபாவில் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவில் அண்ணாமலை பங்கேற்பு

இலக்கிய திருவிழாவில் பங்கேற்ற பின் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என நான் கூறவில்லை - அண்ணாமலை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசினேன் - அண்ணாமலை

நாடாளுமன்ற தேர்தலில் எத்தனை சீட் பாஜகவுக்கு தரப்படும் என்பன உள்ளிட்டவை குறித்து அமித் ஷாவிடம் பேசினேன் - அண்ணாமலை

25 எம்.பி தொகுதிகளில் பாஜக வெற்றிபெறும் அளவிற்கு பாஜகவை வலுப்படுத்துவதே எங்கள் இலக்காகும் - அண்ணாமலை

அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வாக்கியங்கள் இல்லை; தண்ணீரில் எழுதப்படும் வாக்கியங்கள் தான் அதிகம் - அண்ணாமலை

தனிப்பட்ட முறையில் யார் மீதும் எனக்கு கோபம் இல்லை; தொகுதி பங்கீடு முடிவான பிறகே கூட்டணி குறித்து முடிவாகும் - அண்ணாமலை

நிர்மலா சீதாராமனுடன், எஸ்.பி.வேலுமணி சந்திப்பு இயல்பான ஒன்று; கூட்டணி பற்றிய சந்திப்பு இல்லை - அண்ணாமலை

கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவெடுக்கும்; எனக்குத் தனிப்பட்ட முறையில் யார் மீதும் கோபம் கிடையாது - அண்ணாமலை

ஏப்ரல் 14ஆம் தேதி, பிற்பகலில் ஊழல் பட்டியல், ரபேல் வாட்ச் பில் ஆகியவை வெளியிடப்படும்; அதில் எந்த மாற்றமும் இல்லை - அண்ணாமலை

இன்றைய நிலையில் அதிமுக உடன் கூட்டணி தொடர்கிறது; ஆனால், கட்சி கூட்டத்தில் எனது கருத்துகளை கூறுகிறேன்; இரண்டும் வேறுவேறு - அண்ணாமலை

தென்காசி, இராமநாதபுரம் மற்றும் கொங்கு மண்டல பகுதிகளில் பாஜக வளர்ச்சி வேகமாக உள்ளது - அண்ணாமலை

சென்னை போன்ற நகரங்களிலும், பாஜகவின் வளர்ச்சி வேகமாக, அபரிமிதமாக உள்ளது; வெற்றி பெற முனைப்புடன் செயல்படுகிறோம் - அண்ணாமலை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments