67 கோடி தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களைப் பற்றிய தகவல்கள் களவாடப்பட்டதாக அதிர்ச்சி தகவல்!
67 கோடி தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களைப் பற்றிய தகவல்கள் களவாடப்படுவதை தெலுங்கானாவின் சைபராபாத் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பாக ஹரியானாவைச் சேர்ந்த வினய் பரத்வாஜ் என்ற ஒருவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 24 மாநிலங்கள் மற்றும் 8 பெருநகரங்களில் உள்ள தனிநபர்களைப் பற்றிய தகவல்கள் களவாடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கைதான நபர் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை வைத்திருந்ததாக போலீசார் கூறுகின்றனர்.
வாடகைக் கார் பயன்படுத்துவோர், பான் கார்டு பயன்படுத்துவோர் ஜிஎஸ்டி வரி செலுத்துவோர், ஆர்.டி.ஓ ஆவணங்கள், அமேசான் நெட்பிளிக்ஸ் யூடியூப் சந்தாதாரர்கள், பேடிஎம்- போன்பே பயன்படுத்துவோர் உள்பட லட்சக்கணக்கானோரின் தகவல்கள் களவாடப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.
Comments