மேடையில் சமூக நீதி...நிஜத்தில் இப்படியா ? என்ன சூர்யா இதெல்லாம்? கால் கடுக்க காத்திருந்த மாணவர்கள்

0 29058

தனது படங்களிலும், மேடைகளிலும் சமூகநீதி பேசுவதில் முன்னோடிகளான நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, நடிகை ஜோதிகா ஆகியோர் குடும்பத்தினருடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வந்தபோது, அருங்காட்சியகத்தின் கதவுகள் பூட்டப்பட்டு பள்ளி மாணவர்கள் நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்க வைக்கப்பட்ட நிகழ்வு அரங்கேறி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 18 கோடியே 41 லட்ச ரூபாய் செலவில் 2 ஏக்கர் பரப்பளவில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் 10 கட்டடங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இதில் 6 கட்டடங்களில் இரண்டு தளங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களுக்கு ஏற்ப வீடியோ காட்சிகள், அனிமேஷன் காட்சிகள் மெகா சைஸ் டிவிக்களில் ஒளிபரப்பப்படுகின்றன.

ஒவ்வொரு தளத்திலும் மினியேச்சர் சிற்பங்கள், புடைப்பு சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன . ((spl gfx in))இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட இதுநாள் வரை இலவசம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 1ந் தேதி முதல் கட்டணங்கள் அமலுக்கு வந்துள்ளது. பார்வையாளர்களின் நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படும் என்று புதிதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சனிக்கிழமை அருங்காட்சியக விதியை மீறி, காலை 9 மணி அளவில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா ஆகியோரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அருங்காட்சியகத்துக்கு அழைத்து வந்தார். அவர்கள் வருகை தந்ததால், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உள்ளே வராதபடிஅருங்காட்சியக நுழைவு வாயில் இழுத்துப்பூட்டப்பட்டது.

அருங்காட்சியகத்தை பார்வையிட வந்த பள்ளி மாணவர்கள் வெயிலில் கால் கடுக்க காத்து நின்றனர். அவர்களிடம் காலை 10 மணிக்குத்தான் அருங்காட்சியகம் திறக்கப்படும் என்றனர்.

சிவக்குமார் குடும்பத்தினர் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பார்வையிட்டதால் காலை 10.20 மணி வரை பொதுமக்கள் வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. முன்னதாக காலை பத்து மணிக்கு நுழைவாயில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஏன் திறக்கவில்லை ? என்று காத்திருந்தவர்கள், காவலுக்கு நின்ற போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விதியை மீறி எப்படி நடிகர் குடும்பத்தை உள்ளே அனுமதித்தீர்கள் என்று கேட்டு, கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.

இதையடுத்து காலை 10.25 மணிக்கு சிவக்குமார் குடும்பத்தினர் மற்றும் சு.வெங்கடேசன் எம்.பி எல்லோரும் காரில் ஏறி கிளம்பியவுடன், காத்திருந்த மாணவர்கள் உள்ளிட்டவர்கள் வரிசைபடி உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதுவும் ஒருவகை நவீன தீண்டாமை என்று காத்திருந்தவர்கள் ஆதங்கத்துடன் குற்றஞ்சாட்டினர்.

மேடைக்கு மேடை... படத்துக்கு படம்... மக்களுக்கு சமூக நீதி குறித்து புத்திசொல்லும் சிவக்குமார் குடும்பத்தினர் கப்சிப் என்று செல்ல, மாணவ மாணவிகளையும் பொதுமக்களையும் வெயிலில் காத்திருக்க வைத்தது, எந்த விதத்தில் நியாயம் என்று கேட்டபோது, சு.வெங்கடேசன் எம்.பி பதில் ஏதும் கூறாமல் புறப்பட்டுச்சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments