ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கோடையின் தாக்கம் அதிகமாக இருக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்!

0 2343

ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் வரையில் கடும் கோடை வெயில் இருக்கும் என்றும், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான வெப்பநிலை இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய,  கிழக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், ஒடிசா, மேற்குவங்கம், மகாராஷ்ட்ரா குஜராத், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் வெப்பம் அதிகளவில் காணப்படும் என்றும் இந்திய வானிலை மையத்தின் இயக்குனர் ஜெனரல் மிருதக்யுஞ்சய மகாபாத்ரா காணொலி வாயிலான செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments