ஆயுதமேந்தி போராடும் குழுக்கள் வன்முறையை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்ப வேண்டும் - அமித்ஷா
வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதமேந்தி போராடும் குழுக்கள் வன்முறையை கைவிட்டு, ஜனநாயக பாதைக்கு திரும்ப வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.
மிசோரமின் ஐஸ்வாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரு காலத்தில் வன்முறையும், அசாதாரண சூழலும் நிலவி வந்த மிசோரமில், தற்போது அமைதி தவழ்வதாக குறிப்பிட்டார்.
இந்தியாவில் ஜனநாயகத்திற்கு இதுவே சான்று என தெரிவித்த அமித்ஷா, வடகிழக்கு மாநிலங்களிலுள்ள போராளிக்குழுக்கள் ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றி, நாட்டின் முன்னேற்றத்திற்கும், அவர்கள் சார்ந்த பகுதிகளின் வளர்ச்சிக்கும் பங்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
2025ஆம் ஆண்டிற்குள் வடகிழக்கு மாநிலங்களின் 8 தலைநகரங்களுக்கு விமான, சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் என்றும், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயில் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமித்ஷா அறிவித்தார்.
Comments