அமெரிக்க மற்றும் ருமேனிய படைகள் இணைந்து வான்வழித் தாக்குதல் பயிற்சி
நேட்டோ ராணுவ பயிற்சியின் ஒரு பகுதியாக அமெரிக்க மற்றும் ருமேனியப் படைகள் இணைந்து ருமேனிய விமானப்படை தளத்தில் வான்வழித் தாக்குதல் பயிற்சிகளை மேற்கொண்டன.
நேட்டோ படைகளை வலுப்படுத்துதல், நட்பு நாடுகளுக்கு உறுதியளித்தல் மற்றும் ரஷ்ய ஆக்கிரமிப்பை தடுக்கும் முயற்சியாக கடந்தாண்டு ஜூன் மாதம் அமெரிக்காவின் 101வது வான்வழிப்படை ருமேனியாவிற்கு வந்தது.
கடந்த வியாழக்கிழமை ருமேனிய வான், கடல் மற்றும் தடைப்படைகளுக்கு கருங்கடலில் பயிற்சி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று உக்ரைனில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டான்யூப் டெல்டா பகுதியில் ருமேனிய படைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டன.
Comments