ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடியில் நடிகர் ஆர்.கே.சுரேஷ்க்கு தொடர்பு?

0 4265

சென்னை, அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீட்டார்களிடமிருந்து முதலீடாக பெற்ற சுமார் 2,438 கோடி ரூபாயை மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷை விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

நிறுவனத்தின் மேனேஜர் மற்றும் ஏஜெண்டுகளாக செயல்பட்ட ராஜசேகர், ரூசோ ஆகியோருடன் ஆர்.கே.சுரேஷ் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டிருந்ததும், நிறுவன வழக்குகளில் இருந்து தனது நண்பர்களை தப்ப வைக்க உதவியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக விசாரிக்க பலமுறை சம்மன் அனுப்பியும் வராததால் ஆர்.கே.சுரேஷை தேடி சென்றபோது, அவர் வெளிநாடு சென்றது தெரிய வந்துள்ளது. அவரை அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துவருவதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments