சிலியில் பறவைக் காய்ச்சலால் உயிரிழந்து வரும் கடல் சிங்கங்கள்
சிலிநாட்டில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடல் சிங்கங்கள் உயிரிழந்து வருகின்றன. வால்பரைசோ கடற்கரையில் உயிரிழந்த கடற்சிங்கங்கள் கரை ஒதுங்கியுள்ளன.
கடல் சிங்கங்களின் சடலங்கள் சிதைவதால் ஏற்படும் சுகாதார சீர்கேடு காரணமாக, முக்கிய சுற்றுலாப் பாறைப் பகுதியான கேவ்ஸ் டி அன்சோட்டாவை மூடுவதாக அரிகா மேயர் அறிவித்தார்.
இதற்கிடையில், மெலிபில்லாவில், கோழி பண்ணையில் உள்ள பணியாளர்களுக்கு பறவைக் காய்ச்சல் தாக்காமல் இருக்க தடுப்பூசி போடப்பட்டது. சிலியில் 53 வயது நபர் ஒருவருக்கும் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.
Comments