தமிழகத்திலுள்ள 29 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கக் கட்டணம் உயர்வு!
தமிழகத்தில் 29 சுங்கச்சவாடிகளில் 5 விழுக்காடு முதல் 10 விழுக்காடு வரை சுங்க கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.
ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணத்தை உயர்த்திக் கொள்வதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்த கட்டண உயர்வு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
கார்கள் தொடங்கி கனரக வாகனங்களுக்கான சுங்கக் கட்டணங்கள் 5 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையைப் பொருத்தவரை, புறநகர்ப் பகுதிகளில் உள்ள பரனூர், வானகரம், செங்குன்றம், பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது.
Comments