கழுத்தை நெரித்த கல்லூரிக் காதல்... மாணவியின் சடலத்தை மூட்டை கட்டிய விபரீதக் காதலன் ..!

0 4947

கோபிச்செட்டிபாளையத்தில் கல்லூரிக்கு சென்றபோது  மாயமான மாணவி, கொங்கர் பாளையம் தோட்டத்துக்கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவியின் சடலத்தை மூட்டை கட்டி வீசிய மாணவன்  போலீசில் சிக்கி உள்ளார். காதல் கசந்ததால் கழுத்தை இறுக்கிய சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அடுத்துள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி தண்டுமாரியம்மன் கோயில் அருகிலுள்ள தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில், சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலம் கிடப்பதாக, பங்களாப்புதூர் போலீசாருக்கு கிடைத்தது.

தகவலின் பேரில் விரைந்து சென்ற பங்களாப்புதூர் போலீசார், கிணற்றில் சாக்கு மூட்டையில் சடலமாக கிடந்த பெண் சடலத்தை மீட்டு பிணக்கூறாய்வுக்காக கோபிச்செட்டிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கிணற்றில் சாக்கு மூட்டையில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண், கர்ப்பிணியாக இருந்த, கோபி கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஸ்வேதா என்பது தெரியவந்தது. கடந்த 28-ந்தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பாததால் மாணவியின் தாய், கோபிச்செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் தனது மகளைக் காணவில்லை என புகார் அளித்திருந்த நிலையில், மாணவி எப்படி இந்த பகுதிக்கு வந்தார் ? என்று போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர்.

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்த வந்த ஸ்வேதாவுக்கு, மூன்றாம் ஆண்டு படித்து வந்த கொங்கர்பாளையம் பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது. கல்லூரியை முடித்து விட்டு லோகேஷ் சிறுவலூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவ்வப்போது லோகேஷ், காதலி ஸ்வேதாவை, கொங்கர்பாளையம் வரவழைத்து, தனது பாட்டி வீட்டில் வைத்து தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகின்றது. ஸ்வேதா கர்ப்பமானதால் அவரை கைவிட்டு, லோகேஷ் பணி செய்யும் இடத்தில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது சுவேதாவுக்கு தெரிய வந்துள்ளது.

இதனை அறிந்த சுவேதா கடந்த 27ஆம் தேதி லோகேஷ் வேலை செய்யும் இடத்திற்கே சென்று திட்டியதாகவும்,
28ஆம் தேதி தனது வீட்டில், கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு லோகேஷ் வீட்டிற்கு சென்று தனது வாழ்க்கைக்கு நியாயம் கேட்டுள்ளார். அப்போது சுவேதாவை சமாதானம் செய்த லோகேஷ் காதலிக்கு உணவு வாங்கிவர வெளியில் சென்றதாகவும், தான் திரும்பி வருவதற்குள் ஸ்வேதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த லோகேஷ், காதலியின் சடலத்தை மறைப்பதற்காக அவரது கை கால்களை கட்டி சாக்கு மூட்டையில் வைத்து பைக்கில் வைத்து தூக்கிச்சென்று அருகில் உள்ள விவசாய கிணற்றில் உள்ளே வீசி சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பங்களாபுதூர் போலீசார் தற்கொலைக்கு தூண்டுதல், சடலத்தை மறைத்ததாக வழக்குப்பதிவு செய்து, ஸ்வேதாவின் காதலன் லோகேஷை கைது செய்தனர்.

காதலில் விழும் பெண்கள், கல்லூரி காதலனை நம்பி எல்லை மீற அனுமதித்தால், முடிவில் என்ன மாதிரியான விபரீதம் நேரும் என்பதற்கு, இந்த சம்பவமும் ஒரு எச்சரிக்கை பாடம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments