19 வயது இளம்பெண்ணை காரில் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 இளைஞர்கள் கைது!
பெங்களூருவில் 19 வயது இளம் பெண்ணை காரில் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 25ஆம் தேதி பெங்களூரு கோரமங்களா என்ற பகுதியில் ஒரு பூங்கா அருகே ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம்பெண்ணை நான்கு இளைஞர்கள் காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
கோரமங்களா பகுதியில் இருந்து ஓசூர் முக்கிய சாலையில் பயணித்து அத்திப்பள்ளி வரை சுமார் 40 கிலோமீட்டர் காரில் சென்று பின்பு மீண்டும் கோரமங்களா பகுதியில் இறக்கி விட்டுள்ளனர்.
சிகிச்சைக்குப் பிறகு காவல்துறையிடம் இளம்பெண் புகார் அளித்த நிலையில் நான்கு இளைஞர்களையும் காவல்துறை கைது செய்துள்ளனர்.
Comments