6 வாரத்தில் விமான பயணத்துக்கு மட்டும் 5 லட்சம் பவுண்டு செலவு.. பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக் வரி பணத்தை சீரழிப்பதாக மக்கள் புகார்!
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக் 6 வார காலத்தில் விமான பயணத்திற்காக மட்டும் 5 லட்சம் பவுண்டுகள் செலவிட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பு ஏற்ற பின்னர் எகிப்து, பாலி, லாத்வியா மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்று வந்துள்ளார்.
பாலி பயணத்தின் போது ரிஷி சுனாக் தம்முடன் 35 அதிகாரிகளை அழைத்துச் சென்றுள்ளார். தனியார் விமானம் ஒன்றை பிரிட்டன் அரசு முன்பதிவு செய்திருந்தாலும், அது அரசாங்க விமானம் போன்றே கொடி பொறிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வரிப்பணத்தில் வீண் செலவுகளை ஏற்படுத்துவதாக ஏற்கனவே ரிஷி சுனக் மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வந்தாலும், அவர் அதை கண்டுகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.
Comments