''கலாக்ஷேத்ரா ஆசிரியர்கள் 4 பேர் மீது 100க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார்..'' - தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ்.குமாரி..!
கலாக்ஷேத்ரா ஆசிரியர்கள் 4 பேர் மீது 100க்கும் மேற்பட்ட மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகாரளித்துள்ளதாகவும், அது குறித்து தமிழக அரசிடம் அறிக்கை அளிக்கப்படும் என்றும், தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ். குமாரி தெரிவித்துள்ளார்.
சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் கவின் கலை கல்லூரியில் பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்ததாக, மாணவிகள் உள்ளிருப்புப்போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மாணவிகளிடம் குமரி விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் பேட்டியளித்த அவர், 12 மாணவிகளிடம் விசாரணை நடத்தியதாகவும், அது குறித்த அறிக்கையை படித்தபின் கல்லூரி இயக்குனர் மற்றும் துணை இயக்குநரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார்.
விசாரணைக்குப்பின், 31 மணி நேர உள்ளிருப்பு தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மாணவிகள் அறிவித்தனர்.
இதனிடையே, சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், கலாக்ஷேத்ரா முன்னாள் மாணவி ஒருவர் எழுத்துப்பூர்வமாக புகாரளித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை பயின்ற அவர், ஆசிரியர் ஒருவர் மீது பாலியல் புகாரளித்தார்.
Comments