இந்திய ரூபாயை சர்வதேச கரன்சியாக மாற்ற திட்டம்..!

0 20041

2023 ஆம் ஆண்டிற்கான புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையை, டெல்லியில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டார்.

வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பை, 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்த, அதில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டாலரை போல், இந்திய ரூபாயை சர்வதேச கரன்சியாக மாற்றும் முன்னெடுப்புகளுடன் இந்த வர்த்தக கொள்கை உருவாக்கப்பட்டுள்ள நிலையில், முதலில் டாலர் கையிருப்பு பற்றாக்குறையுள்ள நாடுகளுடன் இந்திய ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ள ஏதுவாக, வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன.

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு நடைபெறும் சரக்கு ஏற்றுமதிக்கான வணிக நிதி பரிவர்த்தனைகளை, இந்தியா உதவியுடன் மேற்கொண்டு, நாட்டை வர்த்தக கேந்திரமாக உருவாக்கும் நோக்கில், திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments